விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :26 ஜூன் 2020, 12:39 pm

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய-சீன இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த ராணுவ வீரர்களுக்குத் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு குமரன் சிலை முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் கோபால்சாமி, அனுஷம் வேலு, கந்தசாமி, ஜீவானந்தம், கோபால்ஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.