வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிமுறைகளைச்  சொல்கிறதோ அவற்றை அமல்படுத்த அரசு தயாராக இருக்கிறது என்று எட்டயபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளா

News image
தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் கடம்பூர் ராஜு
Updated On :28 ஜூன் 2020, 8:41 am

DIN

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிமுறைகளைச்  சொல்கிறதோ அவற்றை அமல்படுத்த அரசு தயாராக இருக்கிறது என்று எட்டயபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கட்டட தொழிலாளி கணேசமூர்த்தியின் வீட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

மேலும் கணேசமூர்த்தியின் மனைவி ராமலட்சுமிக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி வருவாய்த் துறை அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, 
சாத்தான்குளம் சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.  மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் விடியோ பதிவுகளுடன் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து அரசு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

உடற்கூறு ஆய்வு அறிக்கையினை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பிறகு நீதிமன்றம் என்ன வழிமுறைகளை சொல்கிறதோ அதை அமல்படுத்துவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளது என்றும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.