வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினரை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினா

News image
சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினரை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.
Updated On :29 ஜூன் 2020, 9:27 pm

DIN


சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினரை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சாத்தான்குளத்துக்கு திங்கள்கிழமை வந்த கே.எஸ்.அழகிரி, ஜெயராஜ் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கிய ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் அழகிரி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி கூறியது: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டபடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதன்மூலம் காலதாமதம் செய்ய தமிழக அரசு முயல்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துமெனில், இது ஒரு மக்கள் இயக்கமாக மாறும்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த  மகேந்திரன் என்பவர் சில நாள்களுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்குப் பிறகு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அதையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்வின்போது, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.