வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவாரூர் அருகே கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
திருவாரூர் அருகே தீக்குளிக்க முயன்ற நபர்
Updated On :29 ஜூன் 2020, 12:26 pm

DIN

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை மகன் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களை கைது செய்யக் கோரியும், மேலும் தொடர்ந்து உயர்ந்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்ட தலைவர் வடிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த விசிக தொண்டரணி மாநில பொறுப்பாளர் தமிழ்க் கதிர், பேரளம் காவல் நிலையத்தில் தன்மீது வழக்குகள் இருப்பதால் தற்போது ஜாமீனில் இருப்பதாகவும் அதனால் பேரளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருவதாகவும் இன்று கையெழுத்திடச் சென்றபோது அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருவரும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் மற்றும் கட்சியினரும் தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.