வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராக வந்த தூத்துக்குடி காவல் அதிகாரிகள்.
Updated On :30 ஜூன் 2020, 8:04 am

DIN

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது, நீதித்துறை நடுவரை தவறாகப் பேசியது, நீதித்துறை நடுவர் விசாரணையை விடியோ பதிவு செய்தது போன்ற காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகினர்.
 
மேலும் திருநெல்வேலி சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,  பி.புகழேந்தி அமர்வு,  நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன்,  தலைமை காவலர் மகாராஜன் ஆகியோர் தரப்பில் வழக்குரைஞரை நியமிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.