கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஈரோட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கு சீல்:  வினியோகஸ்தர்கள் சார்பில் பேரணி

ஈரோடு மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்கள் சார்பில் பேரணி நடந்தது. ஈரோடு நசியனூர் ரோடு சம்பத்நகர் பிரிவில் துவங்கிய பேரணி கொங்கு கலையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது.

News image
Updated On :3 மார்ச் 2020, 12:20 pm


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்கள் சார்பில் பேரணி நடந்தது. ஈரோடு நசியனூர் ரோடு சம்பத்நகர் பிரிவில் துவங்கிய பேரணி கொங்கு கலையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

மனுவில், ஈரோடு மாவட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் 3 ஆயிரம் பேர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விற்பனை செய்து வருகிறோம். 

இத்தொழிலில்  ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.   நீதிமன்ற உத்தரவால் குடிநீர் உற்பத்தி, தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 

எனவே அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.