டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்: உயர்நீதிமன்றம்

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெவித்துள்ளது.

News image
சென்னை உயர் நீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2024, 4:04 pm

DIN

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெவித்துள்ளது. 

சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிடுமாறு சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளை சோதனை செய்து மூடி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் குடிநீர் ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் செலுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு மார்ச் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.