ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.33,584க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :9 மார்ச் 2020, 7:58 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனோ வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றது. 

அதன்படி, திங்கள்கிழமையான இன்று(மார்ச் 5) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,198-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.49.200 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.49,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

திங்கள் கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,198

1 சவரன் தங்கம் ..................... 33,584

1 கிராம் வெள்ளி .................. 49.20

1 கிலோ வெள்ளி ................. 49,200

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,207

1 சவரன் தங்கம் ..................... 33,656

1 கிராம் வெள்ளி .................. 50.50

1 கிலோ வெள்ளி ................. 50,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.