ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒரே நாளில் ரூ.1,152 அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை

சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,152 குறைந்து, ரூ.32,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :13 மார்ச் 2020, 10:21 am

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,152 குறைந்து, ரூ.32,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது.

இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 6 வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(மார்ச் 13) 22 கிராம் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,152 குறைந்து ரூ.32,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.144 குறைந்து, ரூ.4,013-க்கு விற்பனையானது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2.90 காசுகள் குறைந்து ரூ.46.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2900 குறைந்து ரூ.46,000 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,013

1 சவரன் தங்கம் ..................... 32,104

1 கிராம் வெள்ளி .................. 46.00

1 கிலோ வெள்ளி ................. 46,000

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,157

1 சவரன் தங்கம் ..................... 33,256

1 கிராம் வெள்ளி .................. 48.90

1 கிலோ வெள்ளி ................. 48,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.