சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் தங்கம் விலை தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகக் குறைந்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகின்றது.
கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயர்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(மார்ச் 20) 22 கிராம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.31,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.3,909-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து, ரூ.39.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ1,600 உயர்ந்து ரூ.39,900 ஆகவும் விற்பனையாகிறது
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,909
1 சவரன் தங்கம் ..................... 31,272
1 கிராம் வெள்ளி .................. 39.90
1 கிலோ வெள்ளி ................. 39,900
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ..................... 3,879
1 சவரன் தங்கம் ..................... 31,032
1 கிராம் வெள்ளி .................. 38.30
1 கிலோ வெள்ளி ................. 38,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...