டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:19 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை அண்ணா நகர் நெல்லை வீதியைச் சேர்ந்த 54 வயது நபர் கரோனா வைரஸ் நோய் காரணமாக இறந்தார் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள் மூலமாக அவருக்கு கரோனா வைரஸ் பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி இரு மகன்கள் ஆகியோரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேபோல  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது நபர் கரோனா வைரஸ்  பாதிப்பு ஆகி சிகிச்சை பெற்று வந்தார். அவர் மதுரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுக்கு திங்கள்கிழமை இரவு மாற்றப்பட்டார். இதற்கிடையே மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் தபால் தந்தி நகரைச் சேர்ந்த 45 வயது நபர் ஆகியோர் கரோனா வைரஸ் அறிகுறிகள் சேர்க்கப்பட்டனர். 

அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் இருவரும் தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மதுரையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.