எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு

அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

News image
சென்னை மாநகராட்சி
Updated On :31 மார்ச் 2020, 6:47 am

DIN

அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம். அதன்படி, சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோன்று மாவட்டத்திற்குள்ளாக பயணம் மேற்கொள்வோர் தாசில்தாரிடம் அனுமதி பெற்று பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.