பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 மார்ச் 2020, 10:39 am

DIN


கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 

"ஊரடங்கு காரணமாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தங்களுடைய மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர்கள்/ஆணையர்கள் சுகாதார நடைமுறைப்படி  அவர்களை 14 நாள் கண்காணிப்பில் வைத்து அருகில் உள்ள தங்குமிடத்தில் தங்கவைக்க வேண்டும்.

நிறுவனங்களோ, கடைகளோ அல்லது வணிக நிறுவனமோ எவ்வித பிடித்தமும் இல்லாமல் உரிய தேதியில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட எந்தவொரு தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது.

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.