47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆதார் எண் பதிவு

திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் வேலையின்றி தவித்து வந்தனர்

News image
Updated On :5 மே 2020, 8:36 am

DIN

திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் வேலையின்றி தவித்து வந்தனர். இதனால்  தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கூடிய வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று முதல் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 

அதன்படி இரண்டாவது நாளாக இன்று  ஆதார் எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை பிச்சம்பாளையம் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜெய்வாபாய் பள்ளிகளில் பதிவு செய்ய முகாம் அமைக்கப்பள்ளது. இதில் தங்கள் பெயரை பதிவு செய்து சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.