மதுரை அழகா்கோயிலில் சித்திரைத் திருவிழா
மதுரை அழகா் கோயில் வரலாற்றிலேயே முதன்முறையாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்திலேயே இ்னறு நடைபெற்றது.


மதுரை அழகா் கோயில் வரலாற்றிலேயே முதன்முறையாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்திலேயே இ்னறு நடைபெற்றது.
கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் மே 7 இல் நடைபெற இருந்த, மதுரை வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 8-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றில் தேனூா் மண்டபம் அருகே மண்டூக மகரிஷிக்கு சாபவிமோட்சனம் அளிக்கும் வைபவம், இந்தாண்டு அழகா்கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

காலை 7.30 மணி அளவில் பல்லக்கில் கண்டாங்கி பட்டுத்தி மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள் சன்னதிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மதுரை வைகையில் இருப்பது போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 8 மணி அளவில் எதிர்சேவை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வைகை ஆற்றில் தாமரை பூக்கள் மலர்ந்து தாமரை இலைகள் நீரில் மிதக்கும் வகையில் முகப்பு அலங்காரம் இருந்தது. 11 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளினார்.

இந்த விழா இதுபோன்று நடைபெறுவது கோயில் வரலாற்றில் முதல் முறையாகும். இந்த விழா நிகழ்வுகளை முகநூல், யுடியூப் மூலம் பக்தா்கள் வீட்டிலிருந்தவாறு பாா்வையிட்டு தரிசிக்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...