மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை
மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை, சம்மட்டிபுரம் அருகே 3 ஆவது மற்றும் 4வது தெருகள் சந்திக்கும் இடத்தில் குடிசையுடன் கூடிய காலி மனை உள்ளது. இந்த மனையில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது. இந்தப் பை குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை எடுத்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில் உருண்டை வடிவிலான 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்த நாட்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வியாழக்கிழமை இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 ரவுடிகள் பிடி பட்டதாகவும், அவர்கள் அளித்த தகவலின்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...