புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணமடைந்தார். 

News image
Updated On :11 மே 2020, 8:37 am

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணமடைந்தார். 

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் சிறு மதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(14) (10ஆம் வகுப்பு சிறுமி). ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த இவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இருவா் தன்னை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக பிரமுகர் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார். சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.