கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிணற்றில் விழுந்த மயிலைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்

சேலம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி உயிருடன் மீட்டுள்ளனர். 

News image
Updated On :14 மே 2020, 1:06 pm

DIN

சேலம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி உயிருடன் மீட்டுள்ளனர். 

ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதி வனத்தை ஒட்டிய இடத்தில் உள்ளது. தற்போது கடும் கோடை காரணமாக நிலவும் வெப்பம் காரணமாகத் தண்ணீர் தேடி புள்ளி மான்கள் அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன.

இந்நிலையில் நத்தம்பட்டி கிராமத்திற்குத் தண்ணீர் தேடி வந்த ஆண் மயில் ஒன்று அந்த பகுதியில் 15 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத வறண்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த வேகத்தில் மயிலுக்கு அடிப்பட்டதன் காரணமாக அதனால் பறந்து செல்ல முடியவில்லை.

Story image

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மு.ராஜசேகரன் மற்றும் துறைப் பணியாளர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வனக்காவலர் கணேசன் வசம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.