அண்ணாமலைப் பல்கலையில் மே 18 முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வருகிற 18.05.2020 திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள்..


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வருகிற 18.05.2020 திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள் மற்றும் அலுவலகங்களிலும் 50% சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் எனப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்றப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் மற்றும் பதிவாளர் என்.கிருஷ்ண மோகன் ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் அனைத்து அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் எனப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...