திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் நடந்து செல்ல முயன்ற சிலரையும், இணையதளத்தில் பதிவு செய்தவர்களையும், சொந்த மாநில செல்ல விரும்பி ஆனால் இணையதளத்தில் பதிவு செய்யத் தெரியாதவர்களையும், கண்டறிந்து பாடியநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அவர்களுக்கான பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அதில், அவர்களது பெயர்கள் பதிவு செய்து ரசீது பரிசீலனைப் பணி, அனைவருக்குமான மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடித்து, அவர்களுக்கான உணவு வகைகள் வழங்கப்பட்டன.