ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Updated On :5 நவம்பர் 2020, 7:38 am

DIN

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

தாராபுரம் 17 செ.மீ மழையும், பிளவக்கல் 16 செ.மீ மழையும், மூலனூர் 13 செ.மீ மழையும், ஒட்டன்சத்திரம் 12 செ.மீ மழையும், உசிலம்பட்டி 11 செ.மீ மழையும், வத்திராயிருப்பு, குன்னூர், கோபிசெட்டிபாளையம் தலா 9 செ.மீ மழையும், ஆலந்தூர் 8 செ.மீ மழையும், ராஜபாளையம், டிஜிபி அலுவலகம், எட்டயபுரம், போடிநாயக்கனூர் தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.