அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனியில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 (06.11.2020) மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 72 (08.11.2020) மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி 12 செ.மீ மழையும், கெட்டி 10 செ.மீ மழையும், சாம்ராஜ் எஸ்டேட் 9 செ.மீ மழையும், குன்னூர் திருச்சுழி, பரமக்குடி தலா 7 செ.மீ மழையும், சுராலகோடு, தூத்துக்குடி, ராசிபுரம் தலா 6 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...