ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்று அந்த நாட்டின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறார். தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.
இதையடுத்து ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,
அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு எனக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோன்று, அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கமலா ஹாரிஸ் ஆவார். இந்த வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...