
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டிய புகாரில் 2015 - 2018 வரை 121 தமிழக விசைப்படகுகளை இலங்கை படையினர் சிறைப்பிடித்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகுகள் பல ஆண்டுகளாக கடற்கரையில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதாகவும் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார் எழுந்ததது.
இந்நிலையில், 2015 - 2018 வரை 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகளில் 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தால் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ள 94 தமிழக படகுகளில் 88 படகுகள் ராமநாதபுரம் மீனவர்களுடையது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.