தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவு: முதல்வர் பழனிசாமி

பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவு: முதல்வர் பழனிசாமி
Updated On :11 நவம்பர் 2020, 9:07 am

DIN


சென்னை: பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முதல்வர் பழனிசாமி இன்று அந்த மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்த பின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து விடுமோ என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்தை நவீனமயமாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயம், உண்மையான விவசாயம் பற்றி தெரியும். எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

விவசாயிகள் குறித்து விவசாயியான என்னிடம் கேட்டால் தெரியும், எல்லாவற்றையும் திமுக செய்துவிட்டு பழியை மட்டும் அதிமுக மீது போடுகிறது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.