தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மரக்காணம்: கடலில் மூழ்கி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

மரக்காணம் அருகே கடலில் குளித்த புதுச்சேரி மாணவர், தண்ணீரில் மூழ்கி மாயமானதைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image

மரக்காணம் அருகே கடலில் மூழ்கி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம் (கோப்புப்படம்)

Updated On :15 நவம்பர் 2020, 12:26 pm

DIN

மரக்காணம் அருகே கடலில் குளித்த புதுச்சேரி மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானதைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அரிஷ் (20). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவர் தனது ஐந்து நண்பர்களுடன் மூன்று இருசக்கர வாகனத்தில் புதுவையில் இருந்து, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் சரகம் தந்திராயன்குப்பம் பகுதி கடலில் குளிக்கச் சென்றுள்ளார். 

குளிப்பதற்காக கடலில் இறங்கிய மூன்று பேரில் அரிஷ், கடல் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.  இதனையடுத்து மாணவரின் உடலைத் தேடும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.