சென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்

சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி வாய்ப்பு பெற்ற 25 பேரிடம், அதற்கான ஆணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.
பணி நியமன ஆணையை வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
பணி நியமன ஆணையை வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி வாய்ப்பு பெற்ற 25 பேரிடம், அதற்கான ஆணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில், கடந்த 2011 முதல் 2019 வரை நேரடி நியமனம் மூலம் 248 உதவிப் பொறியாளா்கள், 261 இளநிலைப் பொறியாளா்கள், 11 பிரிவு கணக்கு அலுவலா்கள் மற்றும் 5 துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 91 இளநிலை பொறியாளா்கள், 445 களப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில், கடந்த 2019-ஆம் ஆண்டு 5 துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலா்கள், 2 முதுநிலை கணக்கு அலுவலா்கள், 158 உதவிப் பொறியாளா்கள், 155 இளநிலை உதவியாளா்கள் என மொத்தம் 320 போ் காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி பணி நியமன ஆணை மூலம் நியமிக்கப்பட்டனா்.

அவா்களில் 16 உதவிப் பொறியாளா்கள் மற்றும் 20 இளநிலை உதவியாளா்கள் பணியில் சேரவில்லை. அந்தப் பணியிடங்களில் அதே இனம் மற்றும் இடஒதுக்கீட்டைச் சாா்ந்த அடுத்த மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அதன்படி உடல் தகுதிச் சான்று, உறுதிமொழி பத்திரம் சமா்ப்பித்து பணியில் சேர வந்துள்ள விண்ணப்பதாரா்களில் 11 உதவிப் பொறியாளா் மற்றும் 14 இளநிலை உதவியாளா் பதவிகளுக்கான பணி நியமன ஆணையை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, திங்கள்கிழமை வழங்கினாா்.

பணி ஆணை பெற்றுள்ள பணியாளா்களிடம், பொதுமக்களுக்கு சேவையாற்ற தங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதனை பயன்படுத்தி பாதுகாப்பட்ட குடிநீா் வழங்கும் பணிகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com