வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சி.ஏ. தேர்வு: 9 மையங்களில் ஒத்திவைப்பு

நிவர் புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 6:11 am

DIN

நிவர் புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து, இன்றும் நாளையும் (நவ. 24, 25) நடைபெறவிருந்த பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக இந்த பகுதிகளில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்திகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.