வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முதல்வரின் கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைப்பு

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :24 நவம்பர் 2020, 1:13 pm

DIN

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த கரோனா ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 27.11.2020 அன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருந்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 27.11.2020 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.