வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஏழு மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவையும் நிறுத்தம்

நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல்1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 10:54 am

DIN

நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல்1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில்  புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) பிற்பகல் முதல் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, ஆம்னி பேருந்து சேவையும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் நிறுத்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசின் மறுஉத்தரவு வரும்வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவா் புயல், புதன்கிழமை பிற்பகல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.