இவை 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும் மாநில பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிக்குத் தேவையான மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர், பாரை, மண்வெட்டி, கயிறு, டயர் டியூப், மண் மூட்டைகள் உள்ளிட்ட மீட்பு பொருள்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஆய்வு மேற்கொண்டு அனைத்து நேரத்திலும் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட வேண்டுமென காவலர்களுக்கு தெரிவித்தார். அப்போது டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.