நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்மணம்பாக்கம் ஏரி அருகே தாழ்வான பகுதியில் இருந்த 120 பேர் முகாமுக்கு மாற்றம்

அம்மணம்பாக்கம் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்துள்ளனர். 

News image

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொருள்கள் வழங்கல்

Updated On :25 நவம்பர் 2020, 11:40 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மணம்பாக்கம் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியில் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை வட்டாட்சியர் ஜெயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை, பாய், பெட்ஷீட் மற்றும் கொசுவலைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்பகுதியில் மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.