சென்னையில் பெய்த மழையின் அளவு: வட்டம் வாரியாக
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. தரைதளத்தில் இருந்த பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னை புரசைவாக்கத்தில் 148.20 மி.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 145 மி.மீ. மழையும், கிண்டியில் 143.20 மி.மீ. மழையும், மயிலாப்பூரில் 140.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக 1,402.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 127.53 மி.மீ. ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...