ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
Updated On :26 நவம்பர் 2020, 12:01 pm

ANI


ஹைதராபாத்: நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஹைதராபாத் - தாம்பரம் - ஹைதராபாத் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 26-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, பழைய அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று இயக்கப்பட இருந்த 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.