4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்: வைத்திலிங்கம் தகவல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2020, 5:05 am

DIN


சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 மணிவரை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துன் ஆலோசனை நடத்திய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதன்கிழமை காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருவதாக  வைத்திலிங்கம் கூறினார். 

மேலும், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேட்டியளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.