தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அருப்புக்கோட்டையில் கனமழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.

News image
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பெய்த கனமழைக்கு தெற்குத் தெரு பகுதியில் பெருகி ஓடும் மழை நீர் .
Updated On :9 அக்டோபர் 2020, 11:30 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, மாலை சுமார் 3 மணி முதல் தொடர்ந்து சுமார் முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது சாலைகளில் மழை நீர் திரண்டு வெள்ளமென ஓடியது. அன்று மாலை 4 மணி நிலவரப்படி தொடர்ந்து மிதமான மழை பெய்த வண்ணம் இருந்தது. இம்மழையால் இதமான காற்றுடன் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.