சங்ககிரி மலையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
சேலம் மாவட்டம் சங்ககிரி மலையில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி மலையில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அண்மையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீராமன் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி மலைக்கு வருகை தந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மலைக்கு வந்த அவர், கடந்த வருடம் மழையால் சேதமடைந்த கோட்டை மதிற்சுவர், படிக்கட்டுகள், மண்டபங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொல்லியல்துறை அலுவலர் ஈஸ்வர், சங்ககிரி மலை காப்பாளர் சோனுகுமார், மலை காவலாளி சுரேஷ் ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில் வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன்
ஆய்வுக்குப்பின்னர் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது:-
இரண்டு வாரத்திற்கு முன்பு பொறுப்பேற்றதால் சங்ககிரி மலையை ஆய்வு செய்ய வந்துள்ளேன். சங்ககிரி மலைக்கு மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிக்கு தொல்லியல் துறை மூலம் விரைவில் அனுமதி வழங்கப்படும். ஊர் பொதுமக்களின் சார்பில் மலையில் செய்யப்பட்டு வரும் வேலைகள் மகிழ்ச்சியாக உள்ளன. அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்.
அரசர் காலத்தில் முழு வருவாயும் கோயில்கள், கோட்டைகள் கட்டுவதில் செலவழித்தனர். தற்போது ஜனநாயக ஆட்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு வருகின்றன அதிலும், கோட்டை, கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
மலையில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தொல்லியல் துறை சட்டப்படி மதம் சார்ந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதன் தன்மை மாறாமல் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புதிதாக புதுப்பிப்பது தொல்லியல் துறை பன்னாட்டு ஒப்பந்தத்தை மீறியதாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...