தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு
Updated On :14 அக்டோபர் 2020, 9:47 am

DIN


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

சுராலகோடு (கன்னியாகுமரி) 8 செ.மீ மழையும், நாகர்கோயில் 7 செ.மீ மழையும், புத்தன் அணை, பாபநாசம், மைலாடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தலா 6 செ.மீ மழையும், இரணியல், சோலையார் தலா 5 செ.மீ மழையும், பூதப்பாண்டி, தூக்கலாய் தலா 4 செ.மீ மழையும், குளச்சல், தென்காசி, பெரியாறு தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.