விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அண்ணா பல்கலை. விவகாரம்: போடியில் திமுக ஆர்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
அண்ணா பல்கலை. விவகாரம்: போடியில் திமுக ஆர்பாட்டம்
Updated On :15 அக்டோபர் 2020, 7:20 am

DIN

போடி: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து போடியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி அரசு பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும், அண்ணா பல்கலை.யில் மாற்றம் செய்ய முயலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.