விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை அண்ணா பல்கலை. மண்டல மையம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

மதுரையை அடுத்த கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் முன்பாக திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
அண்ணா பல்கலை. மண்டல மையம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
Updated On :15 அக்டோபர் 2020, 7:12 am

DIN

மதுரை: மதுரையை அடுத்த கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் முன்பாக திமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுரையை அடுத்த கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.