காரைக்குடியில் திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட திமுக மாணவரணியினர் சார்பில் காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட திமுக மாணவரணியினர் சார்பில் காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முயற்சியில் மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை தாரை வார்ப்பதாக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் குணசேகரன், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுப. துரைராஜ், சுப. மதியரசன், முன்னாள் காரைக்குடி நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை, திமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...