பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

News image
லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:38 pm

DIN

கம்பம்:  முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

வெள்ளிக்கிழமை  நிலவரப்படி, அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 154 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 128.35 அடி உயரமாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

ஆனால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  129.25 அடி உயரமும், அணையில் 4,536 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவாக இருந்தது. 

அணைக்கு வினாடிக்கு 3,779 கனஅடி தண்ணீர் வந்தது. 1,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெரியாறு அணைப் பகுதியில் 14 மி. மீ., தேக்கடி ஏரியில் 7.8 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

மின் உற்பத்தி அதிகரிப்பு: பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்த நிலையில், லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளில், முதல் மின்னாக்கியில் 28 மெகாவாட், அடுத்த மூன்று மின்னாக்கிகளில் தலா 42 மெகாவாட் என மொத்தம் 154  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.