தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு'

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)
Updated On :18 அக்டோபர் 2020, 7:14 am

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக பெருங்களூர், வல்லத்தில் 13 சென்டி மீட்டர் மழையும், கீழ்பென்னாத்தூரில் 11 சென்டி மீட்டர் மழையும், தஞ்சாவூரில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.