பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 45-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார்.
வெங்காயம் விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளான மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி நுகா்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய, சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகா்வோர் கடைகள் மற்றும் நகரும் கடைகள் மூலமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில் நுகர்வோருக்கு ரூ. 45-க்கு வெங்காயம் வழங்கி விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் இன்று(புதன்கிழமை) முதலும், இதர பகுதிகளில் வியாழக்கிழமை முதலும் ரூ. 45-க்கு வெங்காயம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் அதிகமானோரிடம் பணமோசடி! கோவையைச் சோ்ந்த நிறுவனம் மீது புகாா்

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


