விராலிமலையில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு சிலை: முதல்வர் திறந்துவைத்தார்
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியின் நினைவாக சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரனுடன் கூடிய சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.


விராலிமலை: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியின் நினைவாக சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரனுடன் கூடிய சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, சுமார் 1,353 காளைகள், 424 காளையர் என பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அன்று காலை 7 மணியளவில் தொடங்கிய போட்டியை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது என்பது தனிசிறப்பு. இதேபோல், வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் ஜல்லிக்கட்டு திடலிலேயே அமைக்கப்பட்டிருந்தது என்பது மேலும் சிறப்பு.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளைகளைப் பார்வையிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இந்த விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு விராலிமலை வருகை தந்திருந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நாள் முழுவதும் காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் விடாமல் மல்லுக்கட்டினர். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியை காலை முதல் ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழுவினர் இறுதியில் கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதாக அறிவித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சான்றிதழ் வழங்கினர். இந்த நிலையில் இச்சிறப்பை போற்றும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியால் விராலிமலை-திருச்சி சாலை காமராஜர் நகர் ரவுண்டானாவில் சிலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்துவைத்தார் .
விழாவில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத். உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...