ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் புதிய மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

News image
இந்தியத் தேர்தல் ஆணையம்
Updated On :22 அக்டோபர் 2020, 7:06 am

DIN

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2021ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

மாவட்டவாரியாக தொகுதிகள்:

காஞ்சிபுரம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம்.

வேலூர்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம்(தனி), கீழவைத்தியனாங்குப்பம்(தனி).

ராணிப்பேட்டை: அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு.

திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

விழுப்புரம்: செஞ்சி, மைலம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்.

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி).

நெல்லை: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.

தென்காசி: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம். 

முன்னதாக, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டமும், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.