கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

News image
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
Updated On :5 செப்டம்பர் 2020, 10:04 am

DIN

சென்னை: தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த சுப்புராயன் மகன் முருகன் மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
 
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் கந்தசாமி எதிர்பாராத விதமாக தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், திட்டவிளை பகுதியைச் சேர்ந்த முத்துநாயகம் மகன் ஏசுதாஸ் சாலை விபத்தில் உயிரிழந்தார். கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் சிறுவன் ஜெர்சின்  குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் மகன் ஷிபு என்பவர் மீன்பிடி பணியின் போது, படகு சாய்ந்ததில், கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்கிற தோமா மீன்பிடி பணியின் போது, படகிலிருந்து தவறி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர் மகன் சிறுவன் கலாநிதிமாறன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் கரும்பாயிரம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நடுக்காட்டான் மகன் பாஸ்கர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சிறுவன் ஆதித்யா மற்றும் சக்திவேல் மகள் சிறுமி பாரதி ஆகிய இருவரும் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கூனிமேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வேல்முருகன் மீன்பிடி பணியின் போது தவறி விழுந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த சோமு மகன் செல்வன் கஜன் மற்றும் விவேகானந்தன் மகன் சிறுவன் ஜெகப்பிரியன் ஆகிய இருவரும் தாமரை குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ஜீவானந்தம் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் விஜய் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாவினிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் இரண்டு குழந்தைகள் மகா விஷ்ணு மற்றம் அஜிவித்யாஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் மகன் குருசாமி வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திருபாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயபால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி வட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மகள் கனிமொழி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன்கள் சிறுவன் ஜெகதீஸ்வரன் மற்றும் சிறுவன் விகாஸ் ஆகிய இருவரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தனர். ராமநாதபுரம் வட்டம், காந்திநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சிறுவன் ஜெப்ரி ரோஹித் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற ரவி மகன் ரஞ்சித் கொட்டரை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.