47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

'கோவையில் வீடு இடிந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி'

கோவையில் வீடு இடிந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Updated On :7 செப்டம்பர் 2020, 8:43 am

DIN

கோவையில் வீடு இடிந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கொமாராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பழைய இரண்டு அடுக்கு மாடி வீடு 6.9.2020 அன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததுடன், அருகாமையிலுள்ளள ஓட்டு வீடும் முழுமையாக இடிந்து விட்டது. இந்த விபத்தில் கான்கீரிட் கட்டடத்திலிருந்த கண்ணன் என்பவரின் மனைவி திருமதி சுவேதா என்கிற சாலினி மற்றும் ஓட்டு வீட்டிலிருந்த திரு. கருப்பண்ண ஆசாரி என்பவர் மகன் கோபால் சாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.