விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேலத்துக்காக மட்டுமே 8 வழிச்சாலை திட்டம் அல்ல: முதல்வர் விளக்கம்

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் சேலம் மாவட்டத்துக்கானது மட்டுமே அல்ல, மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

News image
சேலத்துக்காக மட்டுமே 8 வழிச்சாலை திட்டம் அல்ல: முதல்வர் விளக்கம்
Updated On :9 செப்டம்பர் 2020, 9:01 am

DIN


திருவண்ணாமலை: சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் சேலம் மாவட்டத்துக்கானது மட்டுமே அல்ல, மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.  அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், சென்னை - சேலம் இடையேயான 8 வழிச் சாலை திடட்ம் சேலத்துக்காக மட்டும் அமைக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது. அதோடு, இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால் நல்லதொரு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், உழவர் உதவித் தொகை திட்ட மோசடி குறித்த கேள்விக்கு, உழவர் உதவித் தொகை திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த மோசடி குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் குற்றங்கள் மறைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் குற்றங்கள் மறைக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத்தில் நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையை அரசு ஒருபோதும் மறைக்கவில்லை என்று கூறினார் முதல்வர் பழனிசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.