கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது: ஆர்.பி. உதயகுமார்

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

News image
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Updated On :10 செப்டம்பர் 2020, 8:03 am

DIN

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண் கல்லூரியில் நடைபெற்றது. இதனை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 

8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகளானாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. காலத்திற்கு ஏற்ப மக்களின் நிலையறிந்து, மனமறிந்து செயல்பாடுவதில் திமுக பின்தங்கி விட்டது.

8 மாதத்தில் தேர்தல் நிச்சயம் வரும். மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். வெற்றி எங்களுடையதாக இருக்கும்' என்று தெரிவித்தார். 

மேலும், கரோனாவால் அனைத்தும் முடங்கியிருக்கும் நிலையில் மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத வேண்டுமா என்கிற கேள்வி உள்ளது என அரியர் தேர்வு ரத்து குறித்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.